மாவட்ட அளவில் சுற்றுச் சூழல் தகவல் பரப்பு மையம் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தொடங்கி வைத்தார்!

DCP2 DCP3தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவில் சுற்றுச் சூழல் தகவல் பரப்பு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் இன்று (17.03.2015) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் பேசும் போது தெரிவித்தாவது:

சுற்றுச்சூழல் தொடர்பு குறித்த புத்தகச் சேர்க்கை, குறுந்தகடுகளின் சேர்க்கை ஆகியன இம்மையத்தில் உள்ளன.

சுற்றுச்சூழல் குறித்த அன்றாடத் தகவல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் மையமாக இது அமைந்துள்ளது.

எதிர்கால நன்மை கருதி மாணவிகள் இப்பொழுதிலிருந்தே சுற்றுச்சூழல் பாதுகாப்பது நமது கடமை என கொள்ள வேண்டும்.

இங்குள்ள மாணவிகள் தவறாது தங்கள் பெற்றோரிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துக் கூற வேண்டும்.

தூத்துக்குடியில் துறைமுகம், விமான சேவை, ரயில் மற்றும் சாலைவசதிகளும் இருப்பதால் ஏராளமான தொழிற்சாலைகள் இங்கு வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மரங்கள் வளர்ப்பதோடு சுற்றுச்சூழல் மாசுபடாதவாறு பாதுகாப்பது அவசியம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சி.குமார், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் மாவட்ட அறிவியல் அலுவலர் லெனின், திருநெல்வேலி பட்டுப்புழு வளர்ப்புத் துறையின் உதவி ஆய்வாளர் நிஷாந்தினி, திருவைகுண்டம் பட்டுப்புழு வளர்ப்புத் துறையின் உதவி ஆய்வாளர் முகமதுமாதர் குரிஷி, ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் சகோதரி. பாத்திமா, தலைமையாசிரியர் சகோதரி. நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-பி.கணேசன் @ இசக்கி.