கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்யவிடாமல், மார்க்சிஸ்ட் மற்றும் பா.ஜ.க.வினர் சதி செய்கிறார்கள் : மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

west-bengal-chief-minister

people-block-mamtha

mamata

mamata1

மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில், கங்னாப்பூரில் உள்ள Convent of Jesus and Mary  மடத்தில் தங்கியிருந்த 71 வயது கன்னியாஸ்திரி ஒருவரை, 12 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பள்ளியில் இருந்த ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

nun-rape-case

nun-gang-rape-nun-rape-accused_

இந்த வழக்கில் சி.ஐ.டி. போலீசார் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர். தற்போது, அந்த கன்னியாஸ்திரி தற்போது ரானாகாட் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பள்ளி கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 4 பேரை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்கள் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தை 16.03.2015 அன்று முதல்வர் மம்தா பானர்ஜி பார்வையிட்டார். அப்போது, ”குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மனிதர்களே இல்லை. இந்த வழக்கில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்று அவர் உறுதியளித்தார்.

இந்நிலையில், 16.03.2015 அன்று மாலை முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவமனைக்கு சென்று கன்னியாஸ்திரியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் அவர் திரும்பி செல்லும்போது, அவரது காரை மறித்து அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டக்காரர்கள், மம்தா பானர்ஜியின் காருக்கு வழிவிடாமல் தடுத்து நிறுத்தி, காருக்கு முன்பாக தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும் என்று கோஷமிட்டனர்.

சிறிது நேரம் காரில் அமர்ந்திருந்த மம்தா, கீழே இறங்கி வந்து, மார்க்சிஸ்ட் மற்றும் பா.ஜ.க.வினர் உண்மை குற்றவாளிகளை கைது செய்யவிடாமல் சதி செய்வதாக குற்றஞ்சாட்டினார்.

தன்னை கொலை செய்ய விரும்பினால் அவர்கள் வரட்டும் என்று மம்தா ஆவேசமாக கூறினார்.

அதன்பின் போராட்டக்காரர்கள், முதல்வர் மம்தா பானர்ஜியின் கார் செல்ல அனுமதித்தனர்.

-ஆர்.மார்ஷல்.