ஜெ.ஜெயலலிதா ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக எப்படி வழக்கு தொடர்ந்தீர்கள்? தனி நீதிபதி வழங்கிய 1000 பக்கம் தீர்ப்பில் பண பரிவர்த்தனை பற்றி ஒருவரி கூட இடம்பெறாதது ஏன்?- நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி  சரமாரி கேள்வி!

Hon'ble Mr. Justice Chikka Rachappa Kumaraswamy

Hon’ble Mr. Justice Chikka Rachappa Kumaraswamy

Untitled

Untitled

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவின் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங்.

அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங்.

கர்நாடக சிறப்பு நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி, இன்று அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் சரமாரி கேள்விகளை கேட்டார்.

ஜெ.ஜெயலலிதா ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக எப்படி வழக்கு தொடர்ந்தீர்கள்? அதற்குரிய ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளீர்களா?

தனி நீதிபதி வழங்கிய 1000 பக்கம் தீர்ப்பில் பண பரிவர்த்தனை பற்றி ஒருவரி கூட இடம்பெறாதது ஏன்?

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஜெ.ஜெயலலிதாவின் பினாமி என எதை வைத்து கூறுகிறீர்கள்?

1972-லேயே ஜெ.ஜெயலலிதா ரூ.1 லட்சம் சொத்திற்கான வருமான வரியை முறையாக செலுத்தி உள்ளார். அப்படி இருக்கையில் 1972-ம் ஆண்டு அவர் பெற்ற ரூ.1 லட்சம் வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஏன்?

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in