பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுவிழா!

?????????????திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூரில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் காந்தி சின்னக்குழந்தை வாழ்த்தி பாராட்டினார்.

செங்கம் வட்டார வள மையத்தில் “முழு சுகாதார தமிழகம்” என்ற தலைப்பில் ஒன்றிய அளவிலான பேச்சு, கட்டுரை, ஒவியம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில் மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் ப.விக்னேஷ் குமார் கட்டுரைப் போட்டியில் முதலிடத்திலும், வே.சந்துரு ஒவியப் போட்டியில் இரண்டாம் இடத்திலும், ர.ரம்யா பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்திலும் வெற்றி பெற்றார்கள்.

மேலும், கடலூரில் நடந்த மண்டல அளவிலான விளையாட்டுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 100 மீட்டர் ஒட்டப் பந்தயப் போட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் க.பவுன்குமார் வெற்றி பெற்றான்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி தலைமை தாங்கினார். ஆசிரியர் சா.வேல்முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கண்ணுப் பிள்ளை பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் மீனா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை கிராமக் கல்வி குழுத் தலைவரும் மேல்பென்னாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் காந்தி சின்னக்குழந்தை பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

விழாவில் ஆசிரியர்கள் ச.நாராயணன், பூ.ஜோதி, ரேகா, அமலிஜெரினா, மகேஸ்வரி மற்றும் மாணவர்கள் ஊர் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர் கு.தனலெட்சுமி நன்றி கூறினார்.

– செங்கம் மா.சரவணக்குமார்.