தமிழகத்தில் ஜாதி அரசியலை ஒரு போதும் ஆதரிக்க கூடாது : கண்ணாடி வீட்டிற்குள் இருந்துக் கொண்டு கல் வீசும் தமிழிசை செளந்தரராஜன்!

பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.

பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.

இன்று நெல்லை வந்த பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தமிழகத்தில் ஜாதி அரசியலை ஒரு போதும் ஆதரிக்க கூடாது என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வின் பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் சிறந்த பட்ஜெட்டாக உள்ளது. ஆனால், இது குறித்து தமிழகத்தில் அலசி ஆராயாமல் அனைத்து கட்சிகளும் எதிர் கருத்துகளை கூறியிருப்பது துரதிஷ்டவசமானது. இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்பதற்கான வழிமுறைகள் பட்ஜெட்டில் உள்ளது.

ஆனால், வைகோ பட்ஜெட் வெளியாவதற்கு முன்னதாக ஜோதிடர் போல் விமர்சித்து கருத்து தெரிவித்தார். மத்திய அரசின் எந்த திட்டத்தையும் விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வைகோ போன்றவர்கள் கைவிட வேண்டும்.

கட்சிக்கு அதிக உறுப்பினர்களை சேர்த்த முதல் 10 மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். ஆயிரம் உறுப்பினர்களுக்கும் அதிகமாக சேர்த்த 600 மண்டல தலைவர்களுக்கு வரும் 5-ம் தேதி கோவையில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார்.

சொல்வதற்கு ஒன்றுமில்லை.

சொல்வதற்கு ஒன்றுமில்லை.

தமிழகத்தில் ஜாதி கொலைகள் அடிக்கடி நடப்பது கண்டிக்கத்தக்கது. மதத்தின் பெயரால் நடக்கும் சர்ச்சைகளை விமர்சிக்கும் அரசியல் கட்சிகள், ஜாதியின் பெயரால் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகளை கண்டுகொள்வதில்லை. ஜாதியின் பெயரால் வாக்கு வங்கிகளை உருவாக்கும் அரசியலை ஊக்குவிக்க கூடாது. ஜாதி, மதத்தின் பெயரால் உயிர்பலி நடப்பது கண்டிக்கத்தக்கது.

அவ்வாறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பது அரசின் கடமையாகும் என்று, தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க கூட்டணியில், இந்திய ஜனநாயகக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி என சில ஜாதிக் கட்சிகள் இடம் பெற்றிருக்கும் நிலையில், ஜாதி ரீதியிலான வாக்கு வங்கி தவறு என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியிருப்பது எந்த வகையில் நியாயம்?

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in