அருவருக்கத்தக்க அரசியலுக்கு முடிவு கட்டுவோம், ஊழலை அடியோடு களைவோம்: பதவியேற்பு விழாவில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி!- படங்கள்.

அம்மாவிடம் ஆசிபெறும் அரவிந்த் கெஜ்ரிவால்.

அம்மாவிடம் ஆசிபெறும் அரவிந்த் கெஜ்ரிவால்.

தனது வீட்டில் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவால்.

தனது வீட்டில் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவால்.

டில்லி முதல்வராக பொறுப்பேற்ற அரவிந்த் கெஜ்ரிவால்.

டில்லி முதல்வராக பொறுப்பேற்ற அரவிந்த் கெஜ்ரிவால்.

ராம்லீலா மைதானத்தில் மக்கள் மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால்.

ராம்லீலா மைதானத்தில் மக்கள் மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால்.

6 அமைச்சர்களுடன் டில்லி முதல்வராக பொறுப்பேற்ற அரவிந்த் கெஜ்ரிவால், இன்று ராம்லீலா மைதானத்தில் மக்கள் மத்தியில் பேசியதாவது:

 நாங்கள் கடந்த பிப்ரவரி 14 -ல் ராஜினாமா செய்தோம். தற்போது மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளோம். கடந்த முறை 8 சீட்டுகள் குறைவாக இருந்தது.

முதல்வர் இருக்கையில் அரவிந்த் கெஜ்ரிவால்.

முதல்வர் இருக்கையில் அரவிந்த் கெஜ்ரிவால்.

தற்போது நாங்கள் மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளோம். இது வியக்கத்தக்க வெற்றி ஆகும். இது கடவுள் தந்த பரிசு. நாங்கள் இந்த வெற்றியை மிக கவனமாக பார்க்கிறோம்.

அகங்காரத்தினால் பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் தோல்வி கிடைத்தது. டில்லி மக்கள் அனைவரும் என்னை நேசிக்கிறார்கள் என எனக்கு தெரியும். ஆனால், இந்த அளவிற்கு என்னை நேசிக்கிறார்கள் என எனக்கு தெரியாது. அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மக்களும் ஆம் ஆத்மிக்கு வாக்களித்துள்ளனர்.

ஆம் ஆத்மி தலைவர்களோ, எம்.எல்.ஏ.,க்களோ, அமைச்சர்களோ திமிராக நடக்கமாட்டார்கள் என உறுதி அளிக்கிறேன்.

டில்லி மக்களுக்காக 5 ஆண்டுகளும் நான் பணியாற்றுவேன். ஆட்சி காலம் முடியும் வரை நாங்கள் ஆட்சியில் இருப்போம். ஜன் லோக்பால் சட்டம் கொண்டு வர வலியுறுத்துவோம். இதற்காக நாங்கள் மத்திய அரசிற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க மாட்டோம். நாங்கள் 24 மணி நேரமும் உழைப்போம்.

ஊழல், லஞ்சம் அற்ற ஆட்சியை தருவோம். ஐந்தாண்டில் ஊழல், லஞ்சம் வேரோடு களைவோம். சமீபத்திய சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

நாங்கள் அமைதி, மனித நேயத்தையே விரும்புகிறோம். டில்லியில் அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பதே எங்களின் இலட்சியம். சாதி , சமய துன்புறுத்தலை பொறுத்து கொள்ள மாட்டோம். கிறிஸ்தவ ஆலயங்கள் மீதான தாக்குதலை பொறுத்து கொள்ள மாட்டோம்.

பிரதமர் மிகவும் பிஸியாக உள்ளார். அவருக்கு டில்லியை கவனிக்க நேரமில்லை. மாநில நலனே எங்களுக்கு முக்கியம். மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்.

தொழில் துறையினர் அனைவரும் முறையாக வரியை செலுத்த வேண்டும். அரசு பணத்தை யாரும் திருட விட மாட்டோம். வி.ஐ.பி, கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுவோம். சிவப்பு விளக்கு கார்களில் செல்ல மாட்டோம். டில்லி குடி மக்கள் அனைவரும் முதலவர்களே.

கிரண்பேடி எனக்கு ஒரு மூத்த சகோதரி, அவரை நான் மதிக்கிறேன். அஜய்க்கான். கிரண்பேடி ஆகியோர் வழிகாட்டியாக இருக்க வேண்டும். வெறுக்கத்தக்க அரசியலுக்கு முடிவு கட்டுவோம். இந்த நாட்டிற்காக நாங்கள் எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம்.

-எஸ்.சதீஸ் சர்மா.