இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு, அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!

brook
modiகுஜராத்தில் 2002-ல் நடைபெற்ற மத கலவரங்களை, அப்போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோதி ஒடுக்கத் தவறினார். அப்படிப்பட்ட நபரை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க கூடாது என, இந்திய பிரதமர் நரேந்திர மோதி மீது, ‘அமெரிக்க நீதி மையம்’ என்ற மனித உரிமை அமைப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றம் இந்த வழக்கில், 25.09.2014 அன்று பிரதமர் நரேந்திர மோதிக்கு சம்மன் பிறப்பித்துள்ளது. எனினும், அந்த சம்மன் பிரதமர் நரேந்திரமோதி தரப்பில் பெறப்பட்டதா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை.

-ஆர்.மார்ஷல்.