பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் உற்பத்தியாகும் அரிசியில் ஆர்ஸனிக் விஷம்!

http://www.dreamstime.com/royalty-free-stock-images-image30917749இலங்கையில் நிலவும் வறட்சி காரணமாக, அந்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனால், அந்நாடுகளின் அரிசியில் ஆர்ஸனிக் விஷத்தின் செறிவு அதிகமாக இருக்கிறது. இதனை அளவிடுவதற்கான கருவிகள் எவையும் இலங்கையில் இல்லை.

உலக சுகாதார நிறுவனம் ஒரு கிலோ அரிசியில் 200 அலகு ஆர்ஸனிக் அளவை அங்கீகரித்துள்ளது. ஆனால், இலங்கையில் உற்பத்தியாகும் அரிசியில் கிலோவுக்கு 34 முதல் 92 அலகு ஆர்ஸனிக்கே உள்ளது. ஆனால், பங்களாதேஷின் அரிசியில் சராசரியாக கிலோவுக்கு 340 அலகு ஆர்ஸனிக் உள்ளது.

பங்களாதேஷ் மக்களில் பெரும்பகுதியினருக்கு தோல் சார்ந்த நோய்கள் மற்றும் அவர்களின் உடலில் ஆர்ஸனிக்கின் தாக்கம் உள்ளது. இந்நிலையில் இலங்கை அரசாங்கம் அந்நாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யும் முடிவை எடுத்ததுள்ளது. இது இலங்கை மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

-எஸ்.சதிஸ்சர்மா.