செப்டிக் டேங்க் கழிவு நீரை பொது கால்வாயில் திறந்து விட்ட தனியார் தங்கும் விடுதி நிர்வாகம்: பொங்கியெழுந்த பொதுமக்கள்!

ye2209P5 ye2209P6 ye2209P7ஏற்காடு பஸ்நிலையம் அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்டு செயல்ப்பட்டு வருகிறது ஹில்டான் ஹில் ரெசார்ட் எனும் தனியார் தங்கும் விடுதி.

இந்த விடுதியில் போதுமான அளவு செப்டிக் டேங்க் வசதி இல்லாததால் கழிவு நீரை ஊருக்குள் செல்லும் பொது கால்வாயில் கடந்த சில தினங்களாக திறந்துவிட்டு வந்துள்ளனர்.

இந்த பொது கால்வாய், மேல் அழகாபுரம், ஜெரீனா நகர், எம்.ஜி.ஆர்.நகர் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக செல்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது.

இதனை அறிந்த அப்பகுதி பொது மக்கள் 50-க்கும் மேற்ப்பட்டோர் ஏற்காடு ஒன்றிய குழு துணை தலைவர் சுரேஷ் குமார் தலைமையில் அந்த விடுதியை முற்றுகையிட்டு, விடுதி நிர்வாகம், மற்றும் இதனை கண்டு கொள்ளாத யூனியன் நிர்வாகத்தை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அந்த விடுதி நிர்வாகத்தினர் கழிவு நீரை பொது கால்வாயில் செலுத்த பயன்படுத்திய பைப்பை அகற்றினர். அதன் பின்னர் பொது மக்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.

-நவீன் குமார்.