தூத்துக்குடி பிரையண்ட் நகர் வட்டார ஐக்கிய வியாபாரிகள் சங்கம் வெள்ளி விழா மற்றும் சங்க அலுவலக கட்டிட திறப்பு விழா!

DSCF1791தூத்துக்குடி பிரையண்ட் நகர் வட்டார ஐக்கிய வியாபாரிகள் சங்க வெள்ளி விழா மற்றும் அலுவலக கட்டடிடம் திறப்பு விழா பிரையண்ட் நகர் 7-ம் தெரு கீழ்பகுதியில் நடைபெற்றது.

சங்க அலுவலகத்தை தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன் திறந்து வைத்தார். வெள்ளி விழா நிகழ்ச்சி பிரையண்ட் நகர் 5-வது தெரு காமராஜர் மஹாலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் வியாபாரிகள், ஹோட்டல் அதிபர்கள், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

-பொ.கணேசன் @ இசக்கி.