தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் உருவப் பொம்மையை தீயிட்டுக் கொளுத்திய சிங்கள வெறியர்கள் : வேடிக்கை பார்த்த இலங்கை இராணுவம் !

COLUMBOOcolombo-2colomboதமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கு எதிராக, சிங்கள வெறியர்கள் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பாக இன்று (10.06.2014) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய பதாதைகளை கைகளில் ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பினர்.

‘இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்’ என்று வலியுறுத்தி இக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிங்கள வெறியர்கள், தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் உருவப் பொம்மையை தீயிட்டுக் கொளுத்தினர். இதை இலங்கை இராணுவம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும், கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும், போர்குற்றத்தில் ஈடுப்பட்ட இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும், தனிஈழம் அமைப்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கை யுத்தத்தின் போது, தமிழினப் படுகொலையில் ஈடுப்பட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா மிகவும் உறுதியாக இருக்கிறார். இதை வலியுறுத்தி தமிழக சட்ட மன்றத்தில் பலமுறை தீர்மானமும் நிறைவேற்றியுள்ளார்.

இதனால், தமிழக மக்களின் நம்பிக்கைக்கு உரிய நல்ல தலைவராகவும், தமிழக நலன் சார்ந்த உரிமைகளை மீட்பதில் தலைச்சிறந்த முதல்வராகவும், ஈழத்தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மதிப்பு மிக்க தலைவராகவும் ஜெ.ஜெயலலிதா விளங்கி வருகிறார்.

இதை பொறுத்து கொள்ள முடியாத இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ஷே, எப்படியாவது தமிழக அரசை கலைத்து விட வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில், சுப்ரமணியன் சுவாமி போன்ற ஏஜென்டுகளை ஏவிவிட்டு, தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டம் தீட்டி பார்த்தார். தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கிற்கு முன்னால், அவர்களின் சதித் திட்டங்கள் அனைத்தும் தவிடு பொடியானாது.

இந்தியாவில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிந்த மகிந்த ராஜபட்ஷே, இந்தியாவில் அமையவிருக்கும் அரசு, தனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால்தான் லட்டர் பேடு கட்சியான ஜனதா கட்சியை கலைத்து விட்டு, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாகவே சுப்ரமணியன் சுவாமி பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமானார்.

இந்தியாவில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்கு முன்பாகவே, நரேந்திர மோதிக்கு வாழ்த்து சொன்ன முதல் உலகத் தலைவர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ஷே என்பது குறிப்பிடதக்கது. இதற்கெல்லாம் மூளையாக இருந்து செயல்பட்டவர் சுப்ரமணியன் சுவாமி.

எப்படியாவது நரேந்திர மோதி தலைமையிலான மந்திரி சபையில் அதிகாரமிக்க இலாக்காவை கைப்பற்றி விடலாம் என்று சுப்ரமணியன் சுவாமி காய் நகர்த்தி பார்த்தார். ஆனால், அந்த எண்ணம் இன்று வரை ஈடேறவில்லை. இதனால் சுப்ரமணியன் சுவாமியும், இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ஷேயும் விரக்த்தியில் உள்ளனர். அவற்றின் வெளிப்பாடுதான் இந்த ஆர்ப்பாட்டமும், உருவபொம்மை எரிப்பும்.

இந்த பூச்சாண்டிக்கெல்லாம், தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஒரு போதும் அஞ்சமாட்டார். ஏனென்றால், ‘ஆட்சியைப் பிடிப்பது எனது விருப்பமல்ல! மக்களுக்கு நன்மை செய்வதே எனது குறிக்கோள். தமிழர்களின் உரிமைகளை பொறுத்தவரை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருக்கிறார். அதற்காக, அவர் எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறார் என்பதைதான், அவருடைய கடந்த மூன்றாண்டு கால ஆட்சி தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

E-mail :drduraibenjamin@yahoo.in