இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக சுஸ்மா ஸ்வராஜ் இருக்கும் வரை, தமிழர்களுக்கு எந்த நன்மையும் நடக்காது!

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ்

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ்

தற்போது, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சுஸ்மா ஸ்வராஜ், ஏற்கனவே, பல முறை இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். மேலும், இலங்கையில் உள்ள சிங்கள அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான நட்பை பேணுகின்றவர். அவர் தமிழ் நாட்டு மக்களுக்கும், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் கொள்கைகளுக்கும் முரணானவர்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், சுஸ்மா சுவராஜ் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, இந்தியாவின் சார்பில் இலங்கைக்கு சென்ற 12 பேர் கொண்ட நாடாளுமன்றத் குழுவுக்கும், இவர் தான் தலைமை தாங்கி சென்றார். அப்போது அவருக்கு எதிராக தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ஷேவுடன், சுஸ்மா ஸ்வராஜ்  (File photo)

இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ஷேவுடன், சுஸ்மா ஸ்வராஜ்  (File photo)

அத்துடன் அவர் இலங்கையில் ஆறு நாட்கள் தங்கி இருந்தார். அப்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தார். இதை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்க மறுத்தது.

இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை, சுப்ரமணியன் சுவாமி கொண்டிருக்கும் நிலைப்பாட்டிருக்கும், சுஸ்மா ஸ்வராஜ் கொண்டிருக்கும் நிலைப்பாட்டிருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

எனவே, இப்படிப்பட்ட ஒருவர், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டு இருப்பது, இலங்கைக்கு கிடைத்தப் போனஸாக சிங்கள ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் கருதுகின்றனர்.

‘நான் அடிப்பதை போல நடிக்கிறேன்! நீ அழுவதை போல நாடகமாடு’ என்ற கதையாகதான் இவர்களின் எதிர்கால நடவடிக்கைகள் அமையும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.