டெல்லியில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ கொடும்பாவி எரிப்பு : வைகோ உட்பட 500 பேர் கைது!

mdmk vaiko delhim.d.m.k vaik; delhiVaiko_mdmkvaiko2இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச வருகையை கண்டித்து டெல்லியில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உட்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

நரேந்திர மோதி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்ச இன்று காலை டெல்லி வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உட்பட கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 11 மணி அளவில் ஜந்தர் மந்திரில் வைகோ தனது ஆர்ப்பாட்டத்தை தொடங்கினார்.

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்ற கூண்டில் நிறுத்தி, மோதி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சவை அழைத்ததை கண்டிக்கிறோம்.

எரிகிறது எரிகிறது தமிழர் நெஞ்சம் எரிகிறது போன்ற 30 கோஷங்களை அவர்கள் முழங்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, பேசிய வைகோ, இன்று மகிழ்ச்சியும், பெரும் துக்கமும் நிறைந்த ஒரு முக்கியமான நாள். பெரும் பெற்றி பெற்று இந்தியாவின் 15-வது பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்பு நாளும், இந்திய தமிழர்களின் இதயத்தில் ஈட்டியாய் குத்திக்காயம் ஏற்பட்ட நாளுமாகும். மோதி வெற்றிக்கும், பிரதமராகும் மோதிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் இந்த பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்ச அழைக்கப்பட்டிருப்பதை ம.தி.மு.க சார்பிலும் மற்றும் ஈழத் தமிழர்களின் சார்பிலும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராஜபக்ச ஒரு இனத்தையே கூண்டோடு அழித்த மகாபாவி. இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை, குழந்தைகளை ஈவு இரக்கமின்றி தனது படைகள் மூலம் கொன்று குவித்த இனப்படுகொலையாளி. அத்தகையை கொடூரமான ராஜபக்சவை இந்திய பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருப்பது தமிழர்களின் மனதை வேதனைப்படுத்தியுள்ளது.

மோதி பிரதமராக பதவியேற்கும் இந்த நேரம் ஈழத்தமிழர்களின் வாழ்வில் முக்கியமான நேரமும், அவசியமான நேரமும் கூட. இதை மோதி புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இறுதியில் வைகோவை போலீசார் கைது செய்தனர். அவருடன் ம.தி.மு.க,. தொண்டர்கள் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

-எஸ்.சதீஸ்சர்மா.