அதிகப் பிரசங்கி மலைச்சாமி, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்!

மலைச்சாமி

மலைச்சாமி

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா, முன்னாள் மாநில தேர்தல் அதிகாரியும், முன்னாள் எம்.பி.யுமான மலைச்சாமியை, அ.இ.அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட, அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

இதுக்குறித்து ஜெ.ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கே.மலைச்சாமி இன்று (15.05.2014) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.

-சி.மகேந்திரன்.