மனைவியிடம் பேசிய மலேசிய விமான பைலட் ! தலைமறைவான பைலட் மனைவி!

Zaharie Ahmad Shah familyமாயமான மலேசிய விமானம் காணாமல் போவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அந்த விமானத்தை ஓட்டிக்கொண்டிருந்த பைலட் தன்னுடைய மனைவிக்கு ஒரு நிமிட போன் கால் ஒன்றை பேசியுள்ளார் என்பதை தற்போது மலேசிய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மலேசிய விமானத்தை ஓட்டிய பைலட் Zaharie Ahmad Shah, விமானம் மறைவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு தன்னுடைய மனைவியுடன் ஒரே ஒரு நிமிடம் மட்டும் செல்போனில் பேசியுள்ளார்.

மலேசிய புலனாய்வு அதிகாரிகள், அந்த அழைப்பு வந்த செல்போன் குறித்த தகவல்களை ஆராய்ந்த போது, அந்த அழைப்பு Pay-as-you-go என்ற சிம் நிறுவனத்தின் சிம்கார்டு போலியான பெயர் மற்றும் முகவரி கொடுத்து வாங்கப்பட்டதாக தெரிகிறது.உண்மையை மறைத்து சிம் வாங்க வேண்டிய தேவை குறித்தும் தீவிரவாதிகளுடன் தொடர்புகளை பேணினாரா என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக மலேசிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானியிடம் இருந்து அழைப்பு வந்தவுடன் அவரது மனைவி தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் மலேசியாவை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. தற்போது அவர் தனது குழந்தைகளுடன் தலைமறைவாக இருக்கின்றார்.

விமானி தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் தற்போது முதன்முதலாக கைப்பற்றியுள்ளது. இந்த புகைப்படத்தை வைத்து விமானியின் மனைவியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் கூடியவிரைவில் பிடிபடுவார் என மலேசிய புலனாய்வு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.