விலைவாசி உயர்வுக்கு காங்கிரசும், தி.மு.க. தான் காரணம் : கடலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பேச்சு

cudalur-cm jj

cudalur-cm jj.jpg1அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெ. ஜெயலலிதா, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

 காஞ்சிபுரத்தில், கடந்த 3-ம் தேதி தமது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, ஸ்ரீபெரும்புதூர், நாகை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி, சிதம்பரம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில், லட்சக்கணக்கில் திரண்டிருந்த கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே, எழுச்சி உரையாற்றி, அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்தார்.

முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, செல்லும் இடங்களில் எல்லாம் லட்சக்கணக்கான மக்கள், கொளுத்தும் வெயிலையும், பொருட்படுத்தாமல், மிகுந்த ஆர்வத்துடன் திரண்டு தங்களின் ஆதரவை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இன்று (23.03.2014) கடலூர் நாடாளுமன்ற தொகுதி, மஞ்சை நகர் மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கடலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழி தேவனை ஆதரித்து முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பேசியதாவது:-

10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளனர். மத்தியில் உள்ள சர்வாதிகார, ஊழல் ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும். தன்னலக்காரர்களுக்கு மக்களவை தேர்தலில் சவுக்கடி கொடுக்க வேண்டும்.

40 தொகுதியிலும் வெற்றிபெற வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். 40 தொகுதியிலும் வென்று தாய்நாட்டை காப்போம் என்று சூளுரைத்தார்.

மேலும், அதிமுக வேட்பாளர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழக நலன் பாதுகாக்கப்படும். திமுக ஆட்சியில் மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை. விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ், தி.மு.க.வே காரணம் என்று மத்திய அரசு மீதும், திமுக மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

முதலமைச்சரின் வருகையையொட்டி, கடலூர் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் வண்ணத் தோரணங்கள், பதாகைகள் என வரவேற்பு ஏற்பாடுகள் களைகட்டியது. இரு தொகுதிகளும் விழாக்கோலம் பூண்டிருந்தது.