பேரறிவாளன்,சாந்தன்,முருகன் மூன்று பேரின் தூக்கு ரத்து : சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு! தீர்ப்பின் உண்மை நகல் இணைப்பு!

suprem courtA.G. Perarivalan @ Arivu, T. Suthendraraja @ Santhan, V. Sriharan @ Murugan

A.G. Perarivalan @ Arivu, T. Suthendraraja @ Santhan, V. Sriharan @ Murugan

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த மரண தண்டனையை குறைக்க கோரி 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள்.

ஜனாதிபதி பதவிக்கு வந்தவர்கள் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த 13 ஆண்டுகளாக அந்த கருணை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க தாமதம் ஏற்பட்டதாலும், கடந்த 23 ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பதாலும் தங்களது மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

அவர்கள் தங்கள் மனுவில், ‘‘ஏற்கனவே கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதம் ஏற்பட்டதால் 15 பேர் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நடைமுறையில் தங்கள் தண்டனையையும் குறைக்க வேண்டும்’’ என்று கூறி இருந்தனர்.

Honble-Mr.-Justice-P.-Sathasivam

Honble. Mr.Justice.P.Sathasivam

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் 3 பேரின் மனுக்கள் மீதான விசாரணையை நடத்தியது.

Honble.Mr. Justice.Ranjan Gogoi

Honble.Mr. Justice.Ranjan Gogoi

அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் குலாம் இ.வாகனவதி, ‘‘சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கூடாது’’ என்று வாதிட்டார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அவரது வாதத்தை ஏற்கவில்லை என்பது இன்று உறுதியானது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மூன்று பேரின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலால் ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு தூக்கு கயிறை நெருங்கிய முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் அடுத்தக்கட்டமாக விடுதலை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தமிழ் உணர்வாளர்களிடம் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:–

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மூன்று பேரும் தங்கள் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க 11 ஆண்டுகள் தாமதம் ஆனதால் தங்கள் தூக்குத் தண்டனையை குறைக்க கோரி இருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது.

அவர்கள் 3 பேரும் தங்கள் வாழ்நாளின் இறுதி நாள் வரை ஜெயிலிலேயே இருக்க வேண்டும். என்றாலும் அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம்.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் சிறையில் எந்த சித்ரவதையும் செய்யப்படவில்லை. அவர்கள் எந்த துயரமும் அனுபவிக்கவில்லை என்று அட்டர்னி ஜெனரல் வாகனவதி கூறியதை எங்களால் ஏற்க இயலாது. மத்திய அரசின் இந்த வாதத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்.

ஏனெனில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துயரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தூக்குத்தண்டனை பெற்று 23 ஆண்டுகளாக சிறைக்குள் இருப்பவரின் வலி மனநிலை என்னவாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீது விரைவான முடிவு எடுப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவுறுத்தல் கொடுக்க வேண்டும். இன்றைய தீர்ப்புக்கு பிறகாவது இனி எதிர்காலத்தில் கருணை மனுக்கள் மீது விரைந்து முடிவு எடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஜனாதிபதி மற்றும் மத்திய அரசு அவர்கள் கருணை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதம் செய்துவிட்டனர். அதனால்தான் 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

எனவே, இனி கருணை மனுக்களை கையாளும் விஷயத்தில் மத்திய அரசு ஒரு ஒழுங்கு முறையை கடைபிடிக்கும் என்று கருதுகிறோம். இவ்வாறு சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் உண்மை நகல்:

HC - Judgement01 copyHC - Judgement02 copy

HC - Judgement03 copyHC - Judgement04 copyHC - Judgement05 copyHC - Judgement06 copyHC - Judgement07 copyHC - Judgement08 copy

HC - Judgement09 copyHC - Judgement10 copy