திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா காலமானார்

thalaimuraigal-

balu-mahendra-

திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா காலமானார். அவருக்கு வயது 74 இன்று (13.02.2014) அதிகாலை அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து வடபழனியில் உள்ள விஜயா நர்சிங் ஹோமில், தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்

ஆனால், சிகிச்சை பலன் இன்றி அவர் காலமானார். இவர் கடைசியா இயக்கிய படம், ‘’தலைமுறைகள்’’.  இந்தப்படத்தில்,  அவரே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர், இயக்குநர், எடிட்டர், நடிகர் என்று பண்முகம் கொண்டவர் பாலுமகேந்திரா.  1939 ம் ஆண்டு மே மாதம் 19 ம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தார்.இவருடைய இயற்பெயர் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன்,லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார்.

பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971-ல் தங்கப்பதக்கம் பெற்றார்.  ‘நெல்லு’ மலையாள படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். அப்படத்துக்கு 1972-ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

1977-ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான ‘கோகிலா’ வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்படம் ‘முள்ளும் மலரும்’ 1977-ல் வெளியாயிற்று.

பாலு மகேந்திரா இயக்கிய திரைப்படங்கள்:

1.    கோகிலா

2.    அழியாத கோலங்கள்

3.    மூடுபனி

4.    மஞ்சு மூடல் மஞ்சு (மலையாளம்)

5.    ஓலங்கள் (மலையாளம்)

6.    நீரக்ஷ்னா (தெலுங்கு)

7.    சத்மா (ஹிந்தி)

8.    ஊமை குயில்

9.    மூன்றாம் பிறை

10. நீங்கள் கேட்டவை

11.  உன் கண்ணில் நீர் வழிந்தால்

12. யாத்ரா

13.ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு)

14.இரட்டை வால் குருவி

15.வீடு

16.சந்தியாராகம்

17.வண்ண வண்ண பூக்கள்

18.பூந்தேன் அருவி சுவன்னு

19.சக்ர வியூகம்

20.மறுபடியும்

21.சதி லீலாவதி

22.அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி)

23.ராமன் அப்துல்லா

24.ஜூலி கணபதி

25.அது ஒரு கனாக்காலம்

ஒரு எதார்த்தமான கலைஞனை இந்திய திரைஉலகம் இழந்து விட்டாலும், அவருடைய படைப்புக்கள் அனைத்தும் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.