போப்பாண்டவரின் இலங்கைப் பயணம் ஒத்திவைப்பு: வத்திக்கான் பேச்சாளர் பெட்ரிக்கோ தகவல்

Rev.P.Federico Lombardiபோப்பாண்டவர் பிரான்ஸிஸ் இந்த ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்யமாட்டார் என வத்திக்கான் பேச்சாளர் பெட்ரிக்கோ லம்பார்டி தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை அரசாங்கம் போப்பாண்டவர் பிரான்ஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பு தொடர்பில் 2015 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு போப்பாண்டவர் விஜயம் செய்வார் எனவும், எனினும் இந்த ஆண்டில் விஜயம் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் வத்திக்கான் பேச்சாளர் பெட்ரிக்கோ லம்பார்டி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஆகஸ்ட் மாதம், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு போப்பாண்டவருக்கு எழுத்து மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

pope francis with gotabaya rajapaksa meet in vaticanமேலும், கடந்த நவம்பர் மாதம் வத்திக்கானுக்கு விஜயம் செய்திருந்த இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் போப்பாண்டவரைச் சந்தித்து ஜனாதிபதியின் அழைப்பு குறித்து அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.