ஊடகம் என்பது மக்­களின் நம்­பிக்கை­களை வடி­வமைக்­கும் முக்கிய அங்கம்!

south asian diasporaஊடகம் என்பது வெறும் காட்­சிக்­கூ­டமோ அல்லது தக­வல்­களைப் பகிரும் கருவி மட்டும் அல்ல. மக்­களின் நம்­பிக்கை­களை வடி­வமைக்­கும் செயல்முறை­யின் முக்கிய அங்கம் ஊடகம். மக்­களின் உணர்­வு­களுக்கு வடிவம் கொடுப்­ப­தில் தகவல் தொடர்­புத் துறையில் உள்­ள­வர்­களுக்கு பொறுப்பு உண்டு என்று தெரி­விக்­பட்­டுள்­ளது.

தெற்­கா­சிய புலம்பெயர்ந்தோர் மாநாட்­டின் இறுதி நாளான நேற்று (23.11.2013) ‘ஊடகம், கலை­களில் தெற்­கா­சிய பிரதிநி­தித்­து­வம்’ எனும் தலைப்­பில் கலந்­துரை­யா­டல் நடை­ பெற்­றது.

‘ஸ்ட்­ரா­டெ­ஜிக் மூவ்ஸ்’ நிர்வாக இயக்­கு­நர் விஸ்வா சதா­சி­வன், இந்­தி­யா­வின் புகழ்­பெற்ற நடனக் கலைஞரும், தர்பனா கலைப் பயி­ல­கத்­தின் இயக்குநருமான டாக்டர் மல்லிகா சாராபாய், ‘மின்ட்’ ‘மின்ட் ஏசியா’ பத்திரிகை­யின் பொறுப்­பா­சி­ரி­யர் சுகுமார் ரங்க­நா­தன் ஆகியோர் அரங்­கில் பங்­கேற்று தெற்கா­சிய புலம்­பெ­யர்ந்­தோர் சமூ­கத்தைப் பிர­தி­நி­திப்­ப­தில் ஊடகங்கள், கலைகளின் பங்கு, எதிர்­கொள்­ளும் சவால்­கள் ஆகியவை குறித்து கருத்­து தெரி­வித்­த­னர்.