தாய்க்கு அன்பு வற்றிப்போகுமோ? தனது பிள்ளை அவள் மறப்பாளோ? : ஒரு அணிலின் பாசப்போராட்டம்!

A.k.vasanthஇது ஒரு உண்மைப் புகைப்படம்  என் நண்பர் ஆண்டனால் எடுக்கப்பட்டது

ஒரு தாயின் அன்பு தவறிப்போய், பூனை மற்றும் காகங்கள் இடையில் உயிர் பிழைக்க போராடிய ஒரு சின்னஞ்சிறு அணில் குஞ்சு ஒன்றைக் கண்டு, அதற்கு என் வீட்டிலிருந்த கூடு ஒன்றில் அடைக்கலம் கொடுத்தேன்.

சற்று நேரத்தில் அதன் தாய், தன் குஞ்சு கூட்டில் அடைக்கப்பட்டதை கண்டுவிட்டது. தன் குழந்தையை மீட்டெடுக்க மிகக் கடுமையாகப் போராடியது. என் நண்பரும் புகைப்படம் எடுக்க காத்திருந்தார் ஆனாலும் மீட்புப் போராட்டம் கடினமாக இருந்தது.

அதன் சிறிய பற்களால் கூட்டிலிருந்த இரும்புக் கம்பியை ஒன்றும் செய்ய முடியவில்லை. இருந்தபோதும், அது தன் போராட்டத்தை நிறுத்திவிடவில்லை.

இடையிடையே தன் குழந்தையை முத்தமிட்டும் தழுவியும் கொண்டது. அது தன் குழந்தையை ஆசுவாசப்படுத்தியதா? என்பது எனக்குத் தெரியாது.
என்னால் ஓர் தாயின் அன்பை மாத்திரம் உணரக்கூடியதாக இருந்தது. அந்தக் கூட்டைத் திறந்து அதன் தாயின் விருப்பப்படி விட்டுவிட முடிவெடுத்தேன். ஏனென்றால், அதன் தாய்க்குத்தான் தெரியும் தன் குழந்தையை எங்கே வைப்பதென்று. அது அதற்குள்ள உரிமையும் கூட.

கூட்டைத் திறந்தேன். தாய் அணில் தன் குழந்தையை வாயில் கவ்விக் கொண்டு ஓடிச் சென்றது. 45 நிமிட மீட்புப் போரட்டம் வெற்றிகரமாக முடிந்தது! தன் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றிலிருந்து தன் குழந்தையை மீட்டெடுக்க போராடிய அந்த தாய் அணில் அன்பு என்னை வியக்கவைத்தது.

இப்போதெல்லாம், கருக்கலைப்பு, குழந்தையை கொலை செய்தல் மற்றும் கைவிட்டுவிட்டு செல்லுதல் என்பன மிகவும் பொதுவாகவே உள்ளன. ஆனால், அந்த அணில் தனது சிறிய இதயத்தில் பெரிய அன்பை வைத்துள்ளது!

                                          -சமூக வலைத்தளத்தில் ஏ.கே.வசந்த்.