கனடாவில் அஞ்சல்துறை மூலம் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தல்!

canada_post_சட்டவிரோத பொருட்களான துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஆபத்தான இரசாயன பொருட்கள், கனடாவிற்குள் கொண்டு வருவதற்கு கனடாவின் தபால் அஞ்சல் முறையை பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

போலியான கடவுச் சீட்டுக்கள் போலியான ஒலிம்பிக் ஹொக்கி சுவெற்றர்கள் அத்துடன் போதை மருந்துகள் கனடா போஸ்ட் ஊடாக கொண்டு வரப்படுகிறது என கனடா குற்ற புலனாய்வுத்துறை அறிக்கை கூறியுள்ளது.

சந்தேகத்திற்கிடமான பொதிகளை கண்டறிந்து பறிமுதல் செய்ய  பொலிசாருக்கும் தபால் ஊழியர்களுக்கும் இடையில் பாரிய இணைவாக்கம் வேண்டப்பட்டுள்ளது.

ஆயுதங்களடங்கிய தபால் பொதிகளை ஏற்றி வரும் கப்பல்களுக்கான  பிரதான நுழைவிட வசதிகள் ரொறொன்ரோ வன்கூவர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள சர்வதேச விமானநிலையங்களில் உள்ளன என கூறப்பட்டுள்ளது. இத்தகைய செயற்பாடுகளை கண்டுபிடிப்பதற்கு குற்ற புலனாய்வுத்துறை, கனடா போஸ்ட் உடன் இணைந்து செயற்படுவார்கள் என பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.