சீனாவில் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் இந்திய மாணவர்களுக்கான அறிவுரையை பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.இந்தியாவில் வெளிநாட்டு மருத்துவ பட்டப்படிப்பு தேர்வு எழுதுவதற்கு முன்பாக சீனாவில் மருத்துவ பயிற்சி மேற்கொள்வதற்கான உரிமம் பெற்று இருக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளது. சீனாவில் அங்கீகரிக்கப்பட்ட 45 மருத்துவ பல்கலைகழகங்கள் பட்டியலையும் அது வெளியிட்டுள்ளது. இந்த பல்கலைகழகங்களை தவிர மற்ற பல்கலைகழகங்களில் சேர வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளது.அப்படி சேர்ந்தால் சீனாவில் மருத்துவ பயிற்சி பெறுவதற்கான உரிமம் கிடைக்காது என்றும் இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா
