அமர்நாத் புனித யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. மேக வெடிப்பால் தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 43 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேக வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இந்தோ திபெத்திய போலீஸ் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
–எஸ்.சதிஸ் சர்மா
