காஞ்சிபுரம் மாவட்டம், கருங்குழி பேரூராட்சி சார்பில் பொது மக்கள் நலன் கருதி கோடை காலத்தில் பயணிகளின் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் பொருட்டு “தண்ணீர் பந்தல்” கருங்குழி பேருந்து நிறுத்தம் நிழற்குடையில் அமைக்கப்பட்டது.
அத்தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டுள்ள மண்பானையில் தண்ணீர் இல்லை மற்றும் பானையை மூடி வைக்க ஒரு மூடியும் இல்லை. மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் கருங்குழி பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள மண்பானையானது தண்ணீர் நிரப்பப்படாமல் பராமரிப்பின்றி உள்ளது.
இதுகுறித்து பொதுமக்களும் அவ்வழியே வரும் பயணிகளும் கருங்குழி பேரூராட்சியில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. கருங்குழி பேரூராட்சில் வசிக்கும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு விரைவாகவும் மற்றும் முறையாகவும் பராமரிக்க கோரிக்கை வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.
-ம.சசி.
