துறையூர்–முசிறி நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது! – குடியரசு துணை தலைவர் சி.பி. இராதாகிருஷ்ணன் இரங்கல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர்–முசிறி நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துயரமான இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை அவர்கள் பெறவும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் நலம் பெறவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

–எஸ் கார்த்திகேயன்., UTL MEDIA TEAM

Leave a Reply