பிலிப்பைன்ஸ் அதிபர் திரு ஃபெர்டினான்ட் ஆர். மார்கோஸ் ஜீனியர் அழைப்பின் பேரில் 2026 நவம்பர் 17 அன்று நடைபெறவுள்ள 23-வது ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு, 21-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நான் மணிலாவிற்கு பயணம் மேற்கொள்கிறேன்.
ஆசியான் நாடுகளுடனான நமது நட்புறவு இந்தியாவின் கிழக்கு கொள்கையின் மையமாகவும், நமது மகாசாகர் தொலைநோக்குப் பார்வையில் ஒரு முக்கிய இடத்தையும் வகிக்கிறது. பல நூற்றாண்டுகளாக வேரூன்றியுள்ள நமது நட்புறவுகள் வர்த்தகம், போக்குவரத்து, கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்பம், மக்களுக்கிடையேயான உறவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வலுவான நட்புறவாக வளர்ச்சியடைந்துள்ளது.
ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டில் நமது விரிவான உத்திசார் நட்புறவை மேலும் கட்டமைக்கவும், வளர்ச்சி, போக்குவரத்து, செழுமை ஆகியவற்றிற்கான நம்முடைய பகிரப்பட்ட விருப்பங்களுக்கு மேலும் உத்வேகம் அளிக்கவும், சக தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்.
கிழக்கு ஆசிய உச்சி மாநாடு பிராந்திய, உலகளாவிய சவால்கள் தொடர்பான உரையாடல்களுக்கு ஒரு முக்கிய தளத்தை அளிக்கிறது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து பங்கேற்கும் தலைவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
பிலிப்பைன்ஸில் உள்ள துடிப்புமிக்க இந்திய சமூகத்தினருடன் உரையாடுவதையும் நான் எதிர்நோக்கியுள்ளேன். அவர்களுடைய பங்களிப்புகள் நமது இருநாடுகளுக்கிடையே நட்புறவை வலுப்படுத்துகிறது.
இப்பயணம் ஆசியான் உடனான இந்தியாவின் நட்புறவுக்கு புதிய சக்தியை அளித்து அமைதியான, செழுமைமிக்க, மீள்திறன் கொண்ட இந்தோ – பசிபிக் பிராந்தியத்திற்கான நமது கூட்டுறுதிப்பாட்டை வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
எம்.பிரபாகரன்
