மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்குத் தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், இடைத்தேர்தலுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவுச் செய்துள்ளோம்.
வழக்கின் விவரங்கள்:
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.
அரசியல் காரணங்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார். மேலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு:
- நீதிமன்றத்தால் சட்டம் இயற்ற முடியாது என்றும், நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்ற முடியும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெளிவுபடுத்தியது.
- இதனைக் கருத்தில் கொண்டு, இடைத்தேர்தலுக்குத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் இடைத்தேர்தல் நடத்துவதில் எந்தத் தடையும் இல்லை.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA TEAM
editorutlmedia@gmail.com
