Hon_bleCMDOlettertoHon_blePM-Date24.05.2017
அரசு முறை பயணமாக டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் கே.பழனிசாமி, இன்று காலை 11.15 மணியளவில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.
பிரதமர் நரேந்திர மோதியுடன் அரசியல் ரீதியாக பேசவில்லை. தமிழகத்தின் திட்டங்கள் குறித்து கோரிக்கை விடுத்ததாக முதல்வர் கே.பழனிசாமி, கூறியுள்ளார்.
- தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தர நிதி ஒதுக்க வேண்டும்.
- நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.
- தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.
- காவிரி மேலாண்மை வாரியம். காவிரி நதிநீர் முறைபடுத்தும் குழு அமைக்க வேண்டும்.
- பம்பா, அச்சன்கோயில் ஆற்றின் உபரி நீரை தமிழகத்திற்கு தர வேண்டும்.
- மின்சாரம் தயாரிக்க வேண்டும் என கேரளாவை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.
- குடிமராமத்து பணிகளுக்காக ரூ.500 கோடி மானியமாக வழங்க வேண்டும்.
- இலங்கை வசமுள்ள படகுகள், மீனவர்களை விடுவிக்க வேண்டும்.
- மத்திய அரசு திட்டங்களை நிறைவேற்றியதற்காக வழங்க வேண்டி நிலுவை தொகை ரூ.17 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.
சட்டசபையில் வைக்கப்பட உள்ள மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க வேண்டும் எனவும், டிசம்பர் மாதம் நடைபெறும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன்.
பிரதமரை அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. அரசு ரீதியாக தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து வலியுறுத்தினேன். இவ்வாறு முதல்வர் கே.பழனிசாமி கூறினார்.
– எஸ்.சதிஸ் சர்மா.
