மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (அக்டோபர் 9, வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.
மதுராந்தகம் தொகுதி விவரம்:
மதுராந்தகம் இடைத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம்:
- மொத்த வாக்காளர்கள்: 2,13,788
- ஆண்கள்: 1,04,926
- பெண்கள்: 1,08,797
- மூன்றாம் பாலினத்தவர்: 65
- பதிவான வாக்கு சதவீதம்: 85.99%
தாராபுரம் தொகுதி விவரம்:
தாராபுரம் இடைத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம்:
- மொத்த வாக்காளர்கள்: 2,23,306
- ஆண்கள்: 1,07,285
- பெண்கள்: 1,16,013
- மூன்றாம் பாலினத்தவர்: 8
- பதிவான வாக்கு சதவீதம்: 80.31%
இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டுத் தொகுதிகளிலும் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது, எதிர்க்கட்சியினர் மற்றும் வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தும் அவர்களது கூலிப்படையினர் சொல்வதைப் போல தோல்விப் பயத்தால் அல்ல; திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தமிழ்நாடு அரசியலில் மீண்டும் தலை தூக்கக் கூடாது என்பதற்காகத்தான். ஆம், வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், இந்த இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் அதுதான் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் முக்கிய நோக்கம். அதற்காகத்தான் இந்த இரு தொகுதிகளிலும் அவர் தீவிரமாக மீண்டும் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்த உண்மையை கூட புரிந்து கொள்ளாமல், வழக்கம்போல திமுகவினரும், அதிமுகவினரும் ஒன்று சேர்ந்து விஜய் தோல்விப் பயத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று கேலிச் செய்து வருகின்றனர்.
ஆளுங்கட்சியின் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன் வைப்பதை விட்டுவிட்டு; அவதூறுகளை மட்டுமே தேர்தல் பிரசார யுக்தியாக திமுகவும், அதிமுகவும் தொடர்ந்து கடைபிடித்து வருவதை மக்கள் ரசிக்கவில்லை. 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் தோல்வியில் இருந்து திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தகுந்த பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை இந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் நிச்சயம் உணர்த்தும்.. உண்மை கசக்கத்தான் செய்யும் அதற்காக நாம் அதை சொல்லாமல் இருக்க முடியாது.
மதுராந்தகம் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் சத்தியபாமா ஆகிய இருவர் மீதும் மக்கள் மத்தியில் அதிருப்தி இருப்பது உண்மைதான். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அவர்களையே மீண்டும் தவெக வேட்பாளர்களாக நிறுத்தியது தவெக தொண்டர்கள் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காக, விசில் சின்னத்தில் அத்தொகுதி வாக்காளர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்துள்ளார்கள்.
எனவே, இந்த இரண்டுத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு வலுச் சேர்ப்பதாகவே நிச்சயம் அமையும்.
-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA TEAM
editorutlmedia@gmail.com
2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து 21.04.2026 அன்று முன்கூட்டியே நாம் வெளியிட்ட சிறப்புக் கட்டுரை! இதோ நமது வாசகர்களின் பார்வைக்காக! அந்த செய்தியைப் படிக்க கீழ்காணும் இணைப்பைக் “கிளிக்” செய்யவும்.
https://www.ullatchithagaval.com/2026/04/21/119505/
