தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயுஎம்எல் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தோழமைக் கட்சிகளுடனான 2ம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று மாலை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்கும்படி இடதுசாரிகள், விசிக, மதிமுக, காங்கிரஸ், ஐயூஎம்எல் ஆகிய தோழமைக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து அமைச்சர்கள் அழைப்பு விடுத்தனர்.
ஆனால், முதல் கூட்டத்தில் பங்கேற்காத இடதுசாரி கட்சிகள், தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறோம். அதேநேரம் நாங்கள் கூட்டணியிலும் இல்லை என்று தெரிவித்ததைப் போன்றே இந்த முறையும் தெரிவித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர். அதேநேரம், காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டது.
இதையடுத்து தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி’ என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.திவ்யா
