நிலக்கரித் துறையின் வளர்ச்சி!- உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 1 பில்லியன் டன் மைல்கல்லை எட்டி சாதனை.

இந்திய நிலக்கரித்துறை 2014 முதல் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்துள்ளது. வெளிப்படைத்தன்மை, திறன் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு கொள்கை சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியா குறுகிய காலத்தில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் 1 பில்லியன் டன் மைல்கல்லை எட்டியுள்ளது.

மகாநதி நிலக்கரி நிறுவனம் (Mahanadi Coalfields Limited) இந்த மாற்றத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளதுடன், தொடர்ந்து 3 ஆண்டுகளாக 200 மில்லியன் டன்களுக்கு மேல் உற்பத்தியும், விநியோகமும் செய்து சாதனை படைத்துள்ளது. நவீன சுரங்க திட்டமிடல், தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

உற்பத்தியைக் கடந்து, நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு மற்றும் மனிதநேய நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உயர்மட்டக்குழுவின் பரிந்துரையின்படி ஊதியம், சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன. ஒடிசா மாநிலத்தில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் (CSR) கீழ் அதிகளவில் நிதி வழங்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். தல்செர் பகுதியில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிறுவுதல், ஜார்சுகூடாவில் இதய நலன் மருத்துவமனை அமைத்தல் போன்ற மக்கள் நலப்பணிகளை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு இந்நிறுவனம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. 99 சதவீதத்திற்கும் அதிகமான நிலக்கரி உற்பத்தி மேற்பரப்பு சுரங்கத் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், ரயில்வே கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி வருவதன் மூலம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு மகாநதி நிலக்கரி நிறுவனம் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. 

Leave a Reply