மரங்கள் வளர்ப்பு, வனங்கள் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா- ஜப்பான் குழுவினர் ஆலோசனை.

வனத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக, இந்தியா, ஜப்பானை சேர்ந்த கூட்டுக்குழுவினர் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினர். வனத்துறை கூடுதல் பொது இயக்குனர் ரமேஷ்குமார் பாண்டே தலைமையிலான இந்திய பிரதிநிதிகள், ஜப்பான் குழுவினருடன் வனம் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

குறிப்பாக, காடுகளுக்கு வெளியே உள்ள மரங்களை பராமரிப்பது, மரபு ரீதியான மேம்பாடு, மரங்கள் வளர்ப்பில் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது, மரங்கள் பாதுகாப்பு, வன வளத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கான முதலீடு குறித்து இருதரப்பினரும் ஆலோசனை நடத்தினர்.

இந்தியா- ஜப்பான் நாடுகளின் வனத்துறை இடையே கடந்த 2015ம் ஆண்டு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வனத்தில் உள்ள பல்லுயிர் பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்துவது குறித்தும் விவாதித்தனர்.

இதைத்தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள மரங்கள் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை தந்த குழுவினர், கர்நாடக வனத்துறையினருடன் கலந்துரையாடினர். இதையடுத்து, வேளாண் காடு வளர்ப்பு பண்ணைகள், நாகரஹோல் புலிகள் காப்பகம் ஆகியவற்றுக்கு செல்லும் இந்தியா- ஜப்பான் கூட்டுக் குழுவினர் தனியார் பண்ணைகளுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இதன்மூலம் வேளாண்மை, வனப்பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்த முடியும் என இருதரப்பினரும் தெரிவித்தனர்.

Leave a Reply