இந்தியா-மங்கோலியா பாதுகாப்பு அமைச்சக நிலையிலான கூட்டுப் பணிக்குழுக் கூட்டம்!

இந்தியா – மங்கோலியாவின் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையேயான 14-வது கூட்டுப் பணிக்குழு கூட்டம் இன்று (2026 அக்டோபர் 16) உலான்பட்டாரில் நடைபெற்றது. இரு தரப்பினரும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டனர். தற்போதைய முன்முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பிட்டனர். மேலும் பரஸ்பரம் அடையாளம் காணப்பட்ட பிரிவுகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். தொடர்ச்சியான உரையாடல் மூலம் நீண்டகால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். பிராந்திய, சர்வதேச நிகழ்வுகள் குறித்த கண்ணோட்டங்களையும் அவர்கள் பரிமாறிக்கொண்டனர்.

மங்கோலிய ஆயுதப் படைகளின் திறன் மேம்பாடு, வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது ஆகியவற்றில் இந்தியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவை மங்கோலியத் தரப்பு பாராட்டியது. இக்கூட்டத்திற்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டாக்டர் இஷிதா கங்குலி திரிபாதி, மங்கோலியப் பாதுகாப்புத் துறையின் துணைச் செயலாளர் பிரிகேடியர் ஜெனரல் கன்சுக் இ. ஆகியோர் இணைந்து தலைமை வகித்தனர்.

Leave a Reply