தமிழ்நாட்டிலிருந்து பல்கேரியாவிற்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டுள்ள பனை வெல்லத் தூள் ஏற்றுமதி.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், வேளாண் மற்றும் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்திலிருந்து பல்கேரியாவின் வார்னா நகருக்கு, 1.755 மெட்ரிக் டன் எடையுள்ள இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பனை வெல்லத் தூளை (பனை மலர் தேனிலிருந்து தயாரிக்கப்பட்டது) முதன்முறையாக ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த ஏற்றுமதி 15 அக்டோபர் 2026 அன்று நடைபெற்றது.

இது, இந்தியாவின் பாரம்பரிய பனை சார்ந்த தயாரிப்புகளை சர்வதேச சந்தைகளுக்குக் கொண்டு செல்வதிலும், நாட்டின் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஏற்றுமதிப் பொருட்களை அதிகரிப்பதற்கான  முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும்.

137 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் இந்த இயற்கை சாகுபடித் திட்டம், தமிழ்நாட்டின் பாரம்பரிய பனை சார்ந்த தயாரிப்புகளுக்கான சந்தை வாய்ப்புக்களை வலுப்படுத்த உதவுகிறது.  உள்நாட்டுச் சந்தையுடன் ஒப்பிடுகையில், இந்த ஏற்றுமதி மூலம் விவசாயிகளுக்கு 15 முதல் 22 சதவீதம் வரை கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், உற்பத்தியாளர்களுக்கு 17% கூடுதல் வருவாயும் கிடைக்க வகை செய்கிறது.

Leave a Reply