கிராமப்புறப் பொருளாதாரத்திற்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சிறப்பாகப் பங்களிக்கிறன!– குடியரசுத்தலைவர்

ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயவாடாவில் மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகமும், ஆந்திரப்பிரதேச அரசும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கிராமப்புற கைவினைஞர்கள் சங்க பொருட்கள் விற்பனை தேசிய சரஸ் திருவிழாவில் குடியரசுத்தலைவர் இன்று கலந்துகொண்டார். அப்போது, சரஸ் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டு லட்சாதிபதி சகோதரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் வேளாண் துறையில் கிராமப்புறப் பெண்கள் மிகவும் முக்கியப் பங்காற்றுவதாகத் தெரிவித்தார். சுயஉதவிக் குழுக்கள் மூலம் அவர்கள் நிதி, தொழில்நுட்பம், சமூக ரீதியான அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கு மேம்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். மகளிரின் தொழில்முனைவு ஊக்கமளிக்கும் வகையில் வளர்ச்சியடைந்து வருவதையும் பொருளாதாரம் சார்ந்த முடிவெடுக்கும் நடவடிக்கைகளில் கிராமப்புறப் பெண்களின் பங்களிப்பு அதிகரித்திருப்பது குறித்தும் மகிழ்ச்சித் தெரிவித்தார். நாட்டின் சமமான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.

கிராமப்புறப் பொருளாதாரத்திற்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சிறப்பாகப் பங்களித்து வருவதாக குடியரசுத்தலைவர் சுட்டிக்காட்டினார். கடந்த 12 ஆண்டுகளில் இக்குழுக்களுடன் இணைந்த மகளிரின் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது என்றும், அவர்கள் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுக்களில் இணைந்து செயல்படுவதாகவும் கூறினார். அவர்கள் தங்களுடைய குடும்பத்தினரின் பொருளாதார மேம்பாட்டிற்கு உரிய பங்களிப்பை அளிப்பதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற பங்கேற்பு மகளிரை மையமாகக் கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய கிராமப்புற வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்றும், கூட்டு முயற்சியிலான தொழில்முனைவுக்கான வாய்ப்புகளைப் பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளதாகவும் கூறினார்.

லட்சாதிபதி சகோதரி முன்முயற்சி மூலம் கிராமப்புறப் பெண்களின் அதிகாரமளித்தலுக்கு மத்திய அரசு தனித்துவமிக்க உத்வேகத்தையும் வாய்ப்பையும் அளித்துள்ளதாக குடியரசுத்தலைவர் கூறினார். டிஜிட்டல் சேவைகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற பல்வேறு நவீனத் துறைகளில் அவர்களின் பங்கேற்பு அதிகரித்ததன் மூலம் கிராமப்புறப் பெண்களுக்கான திறன் மேம்பாட்டிற்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply