08–09.10.2026 தேதிகளில், உளவுத்துறை வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையில், வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (DRI) மங்களூர் மண்டலப் பிரிவு, டெல்லியிலிருந்து பெங்களூருவுக்கு ரயிலில் பயணம் செய்த ஒரு இந்தியரை இடைமறித்தது. பயணியின் டிராலி பையை முழுமையாகச் சோதனையிட்டதில், மெத்தம்பெட்டமைன் (கிரிஸ்டல் மெத்) எனச் சந்தேகிக்கப்படும் 5.753 கிலோ எடையுள்ள வெள்ளை நிறப் படிகப் பொருள் அடங்கிய மூன்று பொட்டலங்கள் மீட்கப்பட்டன .
சந்தேகத்திற்குரிய போதைப்பொருள், 1985 ஆம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் (NDPS) விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு, பின்னர் தகுதிவாய்ந்த NDPS நீதிமன்றத்தால் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
மெத்தாம்பெட்டமைன், பொதுவாக கிரிஸ்டல் மெத் அல்லது ஐஸ் என்று அழைக்கப்படுகிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஒரு சக்திவாய்ந்த, அதிக போதை தரும் செயற்கை மனத்தூண்டியாகும். இதைத் தவறாகப் பயன்படுத்துவது, சார்புநிலையையும், குறிப்பிடத்தக்க உடல் மற்றும் மனநலப் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இந்தியாவில், மெத்தாம்பெட்டமைன் என்பது 1985 ஆம் ஆண்டின் போதை மருந்துகள் மற்றும் மனத்தூண்டிப் பொருட்கள் சட்டத்தின் (NDPS) கீழ் ஒழுங்குபடுத்தப்படும் ஒரு மனத்தூண்டிப் பொருளாகும். அங்கீகரிக்கப்படாத உடைமை, உற்பத்தி, விற்பனை, கொள்முதல், போக்குவரத்து, இறக்குமதி அல்லது ஏற்றுமதி ஆகியவை இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியவை. தண்டனையின் கடுமை, குற்றத்தின் தன்மை மற்றும் சம்பந்தப்பட்ட அளவைப் பொறுத்து அமையும். இந்த வழக்கில், கைப்பற்றப்பட்ட 5.753 கிலோ அளவு, மெத்தாம்பெட்டமைனுக்காக அறிவிக்கப்பட்ட 50 கிராம் வணிக அளவை விட மிக அதிகமாக உள்ளது. இதற்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும், ரூ. 1 முதல் 2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
புலனாய்வு அடிப்படையிலான அமலாக்கத்தின் மூலம் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதில் DRI உறுதியாக உள்ளது
எஸ்.சதிஸ் சர்மா
