இந்திய கடற்படையின் தற்போதைய கிழக்கு கடற்படை செயல்பாட்டுப் பணியின் ஒரு பகுதியாக, ‘ குலிஷ்’ என்ற இந்திய கடற்படைக் கப்பல் , செயல்பாட்டுப் பராமரிப்புக்காக (OTR) 06 அக்டோபர் 2026 அன்று சிங்கப்பூரில் உள்ள துவாஸ் முனையத்திற்கு வந்தடைந்தது .
இந்தத் துறைமுக வருகையானது, சிங்கப்பூருடனான இந்தியக் கடற்படையின் ஈடுபாட்டின் ஒரு பகுதியாக அமைவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளையும் பிரதிபலிக்கிறது. இந்தப் பயணம், தொடர்ச்சியான கலந்துரையாடலுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதோடு, இருதரப்பு கடல்சார் ஈடுபாட்டிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தையும் வலுப்படுத்துகிறது.
துறைமுக வருகையின் போது, ஐஎன்எஸ் குலிஷின் கட்டளை அதிகாரி, சிங்கப்பூருக்கான இந்திய உயர் ஆணையரைச் சந்திப்பார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பைக் குறிக்கும் வகையில், கட்டளை அதிகாரி கிராஞ்சி போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைப்பார்.
கூட்டு கடல்சார் பாதுகாப்பை வளர்ப்பதற்கும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு இந்த பயணம் இசைவானது. மேலும், இது பாதுகாப்பான, உறுதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கடல்சார் சூழல் குறித்த பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தவும் பங்களிக்கிறது.
திவாஹர்
