அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, ஆயுஷ் சேவை துறையில் மகளிரின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. பல பிரிவுகளில் மகளிர் பங்களிப்பு 50 சதவீதத்திற்கும் அதிகமான உள்ளது. ஆயுஷ் சேவை துறையின் மொத்தப் பணியாளர்களில் மகளிரின் பங்கு
43 சதவீதமாகவும் மருத்துவமனைகள், பகல்நேர பராமரிப்பு மையங்கள், கல்வி நிறுவனங்கள், நலவாழ்வு மையங்கள் ஆகியவற்றில் அவர்களுடைய பங்களிப்பு 50 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது.
ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, சோவா-ரிக்பா, ஹோமியோபதி ஆகியவற்றைக் கொண்ட ஆயுஷ் சேவை பொருளாதாரத்தின் மதிப்பு 2024-25-ம் நிதியாண்டில் 36.92 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-23-ம் நிதியாண்டு முதல் 16.91 சதவீத கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த துறை சுகாதாரம், நலவாழ்வு, கல்வி மற்றும் அது சார்ந்த சேவைகள் ஆகியவற்றில் சுமார் 17.6 லட்சம் பேருக்கு நேரடி வாழ்வாதாரத்தை வழங்குகிறது.
இந்த துறையின் வேலைவாய்ப்புத் திறன் குறித்து பேசிய மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ், வளர்ந்து வரும் ஆயுஷ் சேவை துறையானது சுகாதாரம், நலவாழ்வு, கல்வி மற்றும் அது சார்புடைய சேவைகளில் உரிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். இதன் மூலம் நாட்டின் சுகாதார கட்டமைப்பு வலுவாவதோடு தொழில்முனைவு, திறன் மேம்பாடு, பணியிடங்களில் மகளிரின் பங்கேற்பு ஆகியவற்றிக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்றார்.
எம்.பிரபாகரன்
