மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, தில்லியில் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தவும், தில்லி மக்களின் பயணத்தை எளிதாக்கவும் ₹1,941 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு திட்டங்களை இன்று (29.09.2026) தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பரபுல்லா மேம்பாலச் சாலையின் மூன்றாம் கட்டத்தை தில்லி மக்களுக்கு அவர் அர்ப்பணித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“தில்லியின் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தவும், தில்லி மக்களின் பயணத்தை எளிதாக்கவும், ₹1,941 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டன. ₹1,635 கோடி செலவில் கட்டப்பட்ட பரபுல்லா மேம்பாலச் சாலையின் மூன்றாம் கட்டம், தில்லி மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது கிழக்கு – தெற்கு தில்லிக்கு இடையே சிக்னல் இல்லாத இணைப்பை வழங்கி, பயணத்தை எளிதாக்கி, போக்குவரத்து நெரிசலில் இருந்து நிவாரணம் அளித்து, பயண நேரத்தையும் மிச்சப்படுத்தும். மேலும், மோடி மில்-சாவித்ரி சினிமா மேம்பாலம், லோனி சுரங்கப்பாதை ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.”
திவாஹர்
