இந்தியா-கஜகஸ்தான் கூட்டு ராணுவப்பயிற்சி – இந்திய குழு பயணம்!

இந்தியா-கஜகஸ்தான் நாடுகளிடையே செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 11 வரை நடைபெறவுள்ள கூட்டு ராணுவப்பயிற்சியில் பங்கேற்பதற்காக 60 வீரர்கள் கொண்ட இந்திய ஆயுதப்படைக்குழு இன்று கஜகஸ்தானில் உள்ள ஒஸ்கெமென் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது. காசிண்ட் நகரில் நடைபெறும் இந்தக் கூட்டு ராணுவப்பயிற்சியில் கார்வால் ரைஃபிள்ஸ் படை வீரர்களும் அவர்களுடன் பிற ஆயுதப்படை பிரிவினர், இந்திய விமானப்படை மற்றும் கஜகஸ்தான் ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஐநா அவையின் அறிவுறுத்தலின்பேரில் போர் நிகழாத சூழலில் வழக்கமான ராணுவக் கூட்டுப்பயிற்சி, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் இரு நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தின், திறன் வலிமையடைவதுடன், ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான திறனை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

காசிண்ட் நகரில் நடைபெறும் இந்தக் கூட்டு ராணுவப்பயிற்சியில் இரண்டாம் நிலை நகர்ப்புறப் பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தப் பயிற்சியில் இருநாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர். இதில் இருநாட்டு படைகளும் இணைந்து திட்டமிடுதல், செயல்படுத்துதல், வான்வெளி தாக்குதலுக்கான திறன், ஆளில்லா வான்வெளி அமைப்புகள் மற்றும் அவற்றுக்கெதிரான அமைப்புகளின் ஒருங்கிணைந்த பயன்பாடு போன்ற பல்வேறு உத்திசார் பயிற்சிகளும் இதில் இடம்பெறுகின்றன.

Leave a Reply