தமிழ் உட்பட 5 இந்திய மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிமுகம்.

மத்திய அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுவின் (சிஎஸ்ஐஆர்) 85-வது நிறுவன தினத்தையொட்டி, மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், தேசிய அறிவியல் தகவல் தொடர்பு, கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிவியல் இதழ்களை அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழில் ‘அறிவியல் அறிக்கையாளர்’, அசாமி மொழியில் ‘பிக்யான் லஹர்’, பெங்காலி மொழியில் ‘பிக்யான் பிரித்தாந்தோ’, மராத்தி மொழியில் ‘விக்ஞான் க்ஷிதிஜ்’, தெலுங்கு மொழியில் ‘விக்ஞான் வெலுகு’ ஆகிய பெயர்களில் இந்த இதழ்கள் வெளியிடப்படுகின்றன.

ஆங்கிலம், இந்தி, உருது ஆகிய மொழிகளில் ஏற்கனவே வெளியிடப்பட்டு வரும் அறிவியல் இதழ்களின் நீண்டகால மரபின் தொடர்ச்சியாக, இந்த புதிய இதழ்களின் அறிமுகம் அமைந்துள்ளது.

நம்பகமான அறிவியல் சார்ந்த அறிவை வாசகர்களுக்கு அவர்களது தாய்மொழிகளில் வழங்குவதையும், அந்தந்தப் பகுதிகளின் அறிவியல் ரீதியிலான சாதனைகள், கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்துவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தகவல்கள் மொழிபெயர்க்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. அத்துடன் அந்தந்த மொழிகளில் எழுதப்படும் நேரடிக் கட்டுரைகளும் இதில் இடம்பெறுகின்றன.

Leave a Reply