மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ), 2019 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, முக்கியத் தகவல்களை வேண்டுமென்றே மறைத்து தவறான விளம்பரத்தில் ஈடுபட்டதற்காக, வஜிரம் மற்றும் ரவி ஐஏஎஸ் ஸ்டடி சென்டர் எல்எல்பி நிறுவனத்திற்கு ரூ. 7 லட்சம் அபராதம் விதித்து இறுதி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஒரு நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், மேலும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் விதிகளை மீறி எந்தவொரு பொருட்கள் அல்லது சேவைகள் தொடர்பாகவும் தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரம் செய்யப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அந்தப் பயிற்சி நிறுவனம், 2023-ம் ஆண்டு யூபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் சாதனைகளை முக்கியமாகப் பயன்படுத்தியதோடு, அவர்கள் தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட பாடநெறிகள் குறித்த முக்கியத் தகவல்களை மறைத்து, மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை வெளியிட்டதை கவனித்த பிறகு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
திவாஹர்
