அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சித் துறை இருவார தூய்மை இயக்கத்தை கடைப்பிடிக்கிறது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆதரவின் கீழ், அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சித் துறை (டிஎஸ்ஐஆர்) தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், 2024 மே 1 முதல் மே 15 வரை இருவார தூய்மை இயக்கத்தைக் கொண்டாடுகிறது. புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயாவில் முதல் தூய்மை இயக்கம் இன்று நடைபெற்றது.

டி.எஸ்.ஐ.ஆர் செயலாளரும், சி.எஸ்.ஐ.ஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் என். கலைச்செல்வி தூய்மை இயக்கத்தை தொடங்கி வைத்தார். அங்கு அவர் குழந்தைகளை வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் எதிர்காலத் தலைவர்களாக உருவாக்குமாறு ஊக்குவித்தார். ஆரோக்கியமான மற்றும் துடிப்பான சமுதாயத்தை வளர்ப்பதில் தூய்மையின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். டி.எஸ்.ஐ.ஆர் இணைச் செயலாளர் திரு. சுரிந்தர் பால் சிங், குழந்தைகள் தங்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்பிறகு, டி.எஸ்.ஐ.ஆர் குழுவினர் தூய்மை இயக்கத்தை நடத்தி, குழந்தைகள் தங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க ஊக்குவித்தனர்.

டி.எஸ்.ஐ.ஆர் குடும்பத்தினர் அனைவரும் மேற்கொண்ட தூய்மை உறுதிமொழி, தூய்மைக்கான தனிநபரின் அர்ப்பணிப்பு, தூய்மைக்காக ஆண்டுக்கு நூறு மணி நேரத்தை அர்ப்பணித்தல், தூய்மை இந்தியா இயக்கத்தின் செய்தியைப் பரப்புதல் ஆகியவற்றை இது மையமாகக் கொண்டதாகும். உறுதிமொழி ஒவ்வொரு தனிநபரையும் 100 பேருக்கு ஊக்குவித்து இந்த உறுதிமொழியை எடுக்கவும், அவர்கள் தங்கள் 100 மணி நேரத்தை தூய்மைக்காக அர்ப்பணிக்கவும் ஊக்குவிக்கிறது. தனி நபர்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த பொறுப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த இருவார தூய்மை இயக்கத்தின் முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply