இந்தியா-இந்தோனேசியா இடையே 7-வது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.

பாதுகாப்புத்துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே, இந்தோனேசியாவின் பாதுகாப்பு அமைச்சக தலைமைச் செயலாளர், ஏர் மார்ஷல் டோனி எர்மவான் தஃபாண்டோ, எம்.டி.எஸ் ஆகியோர் 2024 மே 03 அன்று புதுதில்லியில் இந்தியா-இந்தோனேசியா இடையேயான 7-வது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டத்திற்குக் கூட்டாகத் தலைமை தாங்கினர். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் விரிவாக்கம் குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர்.

இந்தப் பயணத்தின் போது, தலைமைச் செயலாளர் புதுதில்லியில் உள்ள டிஆர்டிஓ தலைமையகம், புனேவில் உள்ள டாடா நிறுவனம், எல் அண்ட் டி பாதுகாப்பு தொழிற்சாலைகள் ஆகியவற்றைப் பார்வையிட்டார். பாரத் ஃபோர்ஜ், மஹிந்திரா டிஃபென்ஸ், மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் போன்ற பிற இந்திய பாதுகாப்புத் தொழில் பங்குதாரர்களுடனும் அவர் கலந்துரையாடினார். ஆராய்ச்சி மற்றும் கூட்டு உற்பத்தியில் ஒத்துழைப்பதன் மூலம் பாதுகாப்பு தொழில்துறை திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர் விவாதித்தார். இந்தப் பயணத்தின் போது முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகானையும் அவர் சந்தித்தார்.

2024 மே 02 அன்று இந்தியாவுக்கு வருகை தந்த தலைமைச் செயலாளர், புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply