கடற்படையின் துணைத் தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்றார்.

வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், 01 மே 2024 அன்று கடற்படை துணைத் தளபதியாக பொறுப்பேற்றார். பொறுப்பேற்றவுடன், தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து தேசத்தின் சேவையில் உயரிய தியாகம் செய்த துணிச்சலான இதயங்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.

கிருஷ்ணா சுவாமிநாதன் 1987  ஜூலை 01 அன்று இந்திய கடற்படையில் நியமிக்கப்பட்டார். தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போரில் அவர் நிபுணர். அவர் கடக்வாஸ்லாவின் தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். பிரிட்டனில் உள்ள ஸ்ரீவென்ஹாம் கூட்டு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி, கரஞ்சா கடற்படை போர் கல்லூரி, மற்றும் அமெரிக்காவின் நியூபோர்ட் கடற்படை போர் கல்லூரி ஆகியவற்றிலும் அவர் பயின்றுள்ளார்.

அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றைப் பெற்ற வைஸ் அட்மிரல் தனது கடற்படை வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இதில் ஏவுகணை கப்பல்களின் கட்டளை ஐ.என்.எஸ் வித்யுத் மற்றும் ஐ.என்.எஸ் வினாஷ்; ஐஎன்எஸ் குலிஷ் என்ற ஏவுகணை கப்பல்; வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு கப்பல் ஐஎன்எஸ் மைசூர் மற்றும் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகியவை அடங்கும்.

ரியர் அட்மிரல் பதவி உயர்வு பெற்ற பின்னர், கொச்சியின் தெற்கு கடற்படை கட்டளையின் தலைமையகத்தில் தலைமை பணியாளர் அதிகாரியாக (பயிற்சி) பணியாற்றினார். இந்திய கடற்படை முழுவதும் பயிற்சி நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

கடற்படை ஊழியர்களின் துணைத் தலைவராக இருந்த அவரது தற்போதைய பணிக்கு முன்பு, அவர் தேசிய தலைமையகத்தில் பணியாளர்களின் தலைவராக பணியாற்றினார்.

கிருஷ்ணா சுவாமிநாதனின் கல்வித் தகுதிகள் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி பட்டம், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பில் எம்.எஸ்சி., லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பாதுகாப்பு ஆய்வுகளில் எம்.ஏ., மும்பை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சியில் எம்.பில், மும்பை பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகளில் பி.எச்.டி. ஆகிய பட்டங்களை அவர் பெற்றுள்ளார்.

திவாஹர்

Leave a Reply