மாற்றத்தின் சிறகுகள் – விமான இணைப்பை வலுப்படுத்திய உடான் திட்டத்தின் 10 ஆண்டுகள்.

உடான் திட்டம், இந்த ஆண்டு (2026) பத்து ஆண்டுகளை நிறைவு செய்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில், இத்திட்டம் இந்தியாவின் பிராந்திய விமானப் போக்குவரத்து கட்டமைப்பை விரிவுபடுத்தி, சேவை கிடைக்காத, போதிய சேவை இல்லாத பகுதிகளை இணைத்து, விமானப் பயணத்திற்கான அணுகலை மேம்படுத்தியுள்ளது. பிராந்திய இணைப்பு, சுற்றுலா, மருத்துவ வசதி, விவசாய வர்த்தகம், உள்ளூர்  வேலைவாய்ப்பு ஆகியவற்றை இத்திட்டம் ஆதரித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட உடான் திட்டத்தின் தொடக்கம், இத்திட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. இது விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், செயல்பாட்டு நிலைத்தன்மையை உறுதி செய்தல், பிராந்திய விமான இணைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

இந்தியாவை இணைத்தல்:

பிராந்திய வளர்ச்சியில் விமானப் போக்குவரத்து இணைப்பு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தத் தேவையை உணர்ந்து, 2016-ம் ஆண்டின் தேசிய விமானப் போக்குவரத்துக் கொள்கையானது, குறைந்த செலவில் பிராந்திய இணைப்புக்கு முன்னுரிமை அளித்தது.

இந்த நோக்கத்திற்கிணங்க, உடான் என அழைக்கப்படும் பிராந்திய இணைப்புத் திட்டம் 2016 அக்டோபர் 21 அன்று தொடங்கப்பட்டது . இத்திட்டம் , பிராந்திய வழித்தடங்களில் விமானப் பயணத்தை குறைந்த கட்டணத்திலும் அதே சமயம் பொருளாதார ரீதியாக சாத்தியமானதாகவும், லாபகரமானதாகவும் மாற்றுதை லட்சியமாகக் கொண்ட, எளிய ஆனால் மாற்றத்தை உருவாக்கும் திட்டமாகும்.

உடான் திட்டத்தின் முக்கிய சாதனைகள்:

* செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 2014-ல் 74-ஆக இருந்த நிலையில், இப்போது அது 166-ஆக அதிகரித்துள்ளது . இந்த மாற்றத்தின் மையத்தில் உடான் திட்டம் அமைந்துள்ளது.

* இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 687 மண்டல வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

* இத்திட்டத்தின் கீழ் 3.68 லட்சத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் வழங்கப்படுகிறது.

* இத்திட்டம் 1.72 கோடி பயணிகளின் விமானப் பயணத்திற்கு வழிவகுத்துள்ளது.

இந்த முன்னேற்றத்தின் தொடர்ச்சியாக, உடான் திட்டத்தின் அடுத்த கட்டம் 2026 ஜூலை 4 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் இப்போது மத்திய-மாநில/யூனியன் பிரதேச ஒத்துழைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட ‘உடான்’ திட்டத்தின் மூலம், விமான நிலைய மேம்பாடு, செயல்பாட்டு ஆதரவு, உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் திறன் ஆகியவற்றின் மீது கவனம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், பிராந்திய விமானப் பயணத்தின் உள்கட்டமைப்புகளையும், சாத்தியக்கூறு சவால்களையும் எதிர்கொள்ள முற்படுகின்றன. இந்தியா முழுவதும் விமான இணைப்புக்கான ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply