பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்பு அமைச்சகத்தின் பல்வேறு துறைகளுக்கு மேம்படுத்தப்பட்ட இணையதளங்களை இன்று (2026 அக்டோபர் 19) தொடங்கி வைத்தார். நவீனமான, எளிதில் அணுகக்கூடிய, பயனருக்கு உகந்த இந்தத் தளங்கள், டிஜிட்டல் பிராண்ட் அடையாளக் கையேடு 3.0, இந்திய அரசு இணையதளங்களுக்கான வழிகாட்டுதல்கள் 3.0 ஆகியவற்றுக்கு முழுமையாக இணக்கமாக உள்ளன.
இந்த இணையதளங்கள், மக்கள், சம்பந்தப்பட்ட துறையினர், பயனர்கள் என அனைவருக்கும், பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்கைகள், முன்முயற்சிகள், செயல்பாடுகள், அறிவிப்புகள், பாதுகாப்பு தொடர்பான புதிய தகவல்கள், பிற முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை வழங்குகின்றன. இதன் உள்ளடக்கம் 22 இந்திய அலுவல் மொழிகளில் கிடைப்பதால், இது பரந்த அளவில் சென்றடைவதை உறுதி செய்கிறது.
எம்.பிரபாகரன்
