கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், இந்திய பயிற்சிப் படைப்பிரிவு செஷல்ஸில் பயிற்சியை நிறைவு செய்து புறப்பட்டது.

இந்தியக் கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவின் கப்பல்களான ஐஎன்எஸ் திர், ஐஎன்எஸ் சுஜாதா, இந்தியக் கடலோரக் காவல் படை கப்பலான சாரதி ஆகியவை, கடல்சார் பயிற்சியின் ஒரு பகுதியாக செஷல்ஸ் சென்றன. இந்தக் கப்பல்கள், 12 அக்டோபர் 2026 அன்று தொடங்கிய தங்களது பயணத்தை, 15 அக்டோபர் 2026 அன்று நிறைவு செய்து, செஷல்ஸில் உள்ள விக்டோரியா துறைமுகத்திலிருந்து புறப்பட்டன. இந்தப் பயணம் தொழில்முறைப் பயிற்சி, திறன் மேம்பாடு, அந்நாட்டு கடற்படையினருடனான கலந்துரையாடல்கள் ஆகியவை மூலம், இந்தியா-செஷல்ஸ் இடையேயான நீண்டகாலக் ஒத்துழைப்பை வலுப்படுத்தியது.

துறைமுக பயணத்தின் போது, இந்திய பயிற்சிப் படைப்பிரிவின் மூத்த அதிகாரியும், கப்பல்களின் கட்டளை அதிகாரிகளும், செஷல்ஸ் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதியான மேஜர் ஜெனரல் மைக்கேல் ரோசெட்டைச் சந்தித்தனர். இரு படைகளுக்கும் இடையிலான நீடித்த ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

Leave a Reply