தில்லி ஜந்தர் மந்தர்‌ மற்றும் தில்லிக்கு வெளியே நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க உயர் நிலைக் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்.

2026 ஜூலை மாதத்தில் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரிலும் தில்லிக்கு வெளியே சில இடங்களிலும் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான அனைத்து அம்சங்களையும் விசாரிப்பதற்காக ஒரு உயர் நிலை அதிகாரம் பெற்ற விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. பாதிக்கப்பட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, http://hpec.nic.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

 உச்ச நீதிமன்றத்தின் 18 ஆகஸ்ட் 2026 தேதியிட்ட உத்தரவின் படி அனைத்துப் பிரச்சினைகளையும் இந்தக் குழு ஆய்வு செய்யும். பெல்லட் துப்பாக்கிகளின் பயன்பாடு, பெண்கள் மீதான வன்முறை, இரு தரப்பிலும் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Leave a Reply